Home வணிகம்/தொழில் நுட்பம் “இபே” நிறுவன தரவு தளத்தில் தொழில்நுட்ப ரீதியாக தாக்குதல்!

“இபே” நிறுவன தரவு தளத்தில் தொழில்நுட்ப ரீதியாக தாக்குதல்!

564
0
SHARE
Ad

imagesமே 26 – இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான இபே(ebay) அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளுக்கு இணையம் மூலமாக வர்த்தகச் சேவை புரிந்து வருகின்றது.

உலக அளவில் 145 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தரவு தளத்தில் இணையத் திருடர்கள் தொழிநுட்ப ரீதியாகத் தாக்கி, தகவல் திருட்டை நடத்தியுள்ளனர்.

திருடப்பட்ட இந்நிறுவனத்தின் தரவு தளத்தில், ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு புதிய கணக்கை துவங்க, வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட முகவரி, தொலைப்பேசி எண்கள் உட்பட அனைத்து முக்கியத் தகவல்களையும் அளிக்கவேண்டும்.

#TamilSchoolmychoice

தற்போது இந்த தாக்குதல் காரணமாக, வாடிக்கையாளர்களின் முக்கியத் தகவல்கள் அனைத்தும் அவர்கள் வசமாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.இதன் மூலமாக அவர்கள் பெரும் எதிர்விளைவை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.

சமீபத்திய வருடங்களில், இது போன்ற தகவல் திருட்டை இ-பே சந்திப்பது இதுவே முதன்முறையாகும். இ-பே நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதனால் தான், இத்தகைய தகவல் திருட்டு நடந்துள்ளதாக பல்வேறு நாடுகளால் குற்றம் சாட்டப்படுகின்றது.

குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் மட்டும் சுமார் 18 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டு தகவல் தொடர்பு ஆணையம், இ-பேக்கு 500,000 பவுண்டுகள் வரி அபராதமாக விதிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இ-பே நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களிடம், தங்கள் கணக்குகளின் தகவல்கள் மற்றும் கடவுச் சொற்களை உடனடியாக மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.