Home தொழில் நுட்பம் ‘ஸ்கைபாக்ஸ் இமேஜிங்’ நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் கூகுள்! 

‘ஸ்கைபாக்ஸ் இமேஜிங்’ நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் கூகுள்! 

527
0
SHARE
Ad

images (1)மே 27 – செயற்கைக்கோள் நிறுவனமான ‘ஸ்கைபாக்ஸ் இமேஜிங்’ (Skybox Imaging) – ஐ வாங்க பிரபல கூகுள் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கூகுள் நிறுவனம், தனது இணைய தொழில்நுட்பத்தினை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னோட்டமாக பலூன்கள் மூலமாக இணைய சேவை (Project Loon), ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் இணைய சமிஞ்ஞை அனுப்புதல் போன்றத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் தற்போது, ஸ்கைபாக்ஸ் இமேஜிங் நிறுவனத்தின் செயற்கைக் கோள் தொழில் நுட்பங்களை இணைய சேவையில் செயல்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம், ஸ்கைபாக்ஸ் இமேஜிங்-ஐ வாங்கும் பட்சத்தில், செயற்கைக்கோள் மூலமாக புவியின் எழிலமைப்பு, தோற்றம் போன்றவற்றினை உயர் தரத்தில் பெற முடியும். இதன் மூலம் கூகுள் மேப் மற்றும் கூகுள் எர்த் சேவைகள் மக்களிடையே பெரும் செல்வாக்கினைப் பெறும்.

#TamilSchoolmychoice

ஸ்கைபாக்ஸ் இமேஜிங் நிறுவனத்துடனான வர்த்தகம் குறித்து கூகுள் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட வில்லை என்றாலும், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்நிறுவனத்தை பெற இருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.