Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் #1: முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி!

உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் #1: முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி!

600
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 27 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியாளராக உலகக் கிண்ணத்தை வென்றது.

அதன் பின்னர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வரும் ஜூன் மாதம் 12 -ம் தேதி தொடங்கி ஜூலை 13 -ம் தேதி வரை பிரேசிலில் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இதில் பிரேசில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

#TamilSchoolmychoice

போட்டிகளை நடத்தும் நாடு என்பதால் பிரேசில் நேரடியாகவே இந்தப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டது. மீதமுள்ள 31 அணிகளும் தகுதி சுற்றுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம் #1: ஸ்பெயின் 

சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் தரவரிசை பட்டியலின் படி, நடப்பு உலக வெற்றியாளரும் (சாம்பியன்), ஐரோப்பிய வெற்றியாளருமான ஸ்பெயின் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Team Spain

(ஸ்பெயின் அணியில் விளையாட இருக்கும் வீரர்கள்)

Spain's coach Vicente Del Bosque

(ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் – விண்செண்ட் டெல் பாஸ்க்)

படம்: EPA