Home நாடு உலகக் கிண்ணப் போட்டிகள் ஆர்டிஎம் 1-இல் ஒளிபரப்பாகும்

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆர்டிஎம் 1-இல் ஒளிபரப்பாகும்

1063
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் ஆர்டிஎம் 1-வது ஒளியலையில் ஒளிபரப்பாகும் என்றும் இதனை பொதுமக்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம் என தொடர்பு பல்ஊடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார்.

இன்றைய அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும் 27 ஆட்டங்கள் நேரலையாக ஒளிபரப்பாகும் என்றும் எஞ்சிய ஆட்டங்கள் ஆட்டம் முடிந்த பின்னர் காலம் தாழ்த்தி தாமதமாக ஒளிபரப்பாகும் என்றும் அவர் மேலும் அறிவித்தார்.

அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், மேற்கொண்டு இது தொடர்பான விவரங்களை நிதி அமைச்சர் லிம் குவான் நாளை வியாழக்கிழமை அறிவிப்பார் எனவும் கோபிந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.