Home இந்தியா தூத்துக்குடி: பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் ரஜினி

தூத்துக்குடி: பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் ரஜினி

1009
0
SHARE
Ad
ரஜினியின் தூத்துக்குடி வருகை – முகநூல் படம்

தூத்துக்குடி – ஸ்டெர்லைட் ஆலை தொடர்பில் நடைபெற்ற போராட்டங்களில் துப்பாக்கிச் சூட்டினால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் தூத்துக்குடிக்கு வருகை தந்து ரஜினிகாந்த் இன்று புதன்கிழமை (மே 30) சந்தித்தார்.

போராட்டங்களில் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கிய ரஜினிகாந்த், துப்பாக்கிச் சூட்டினால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கினார்.

தூத்துக்குடி வந்தடைந்த ரஜினிக்கு ஆயிரக்கணக்கான இரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு வழங்கினர்.

#TamilSchoolmychoice

அவர் வருகை தருவதை முன்னிட்டு தூத்துக்குடி மருத்துவமனையிலும் பலத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.