Home கலை உலகம் மணிரத்னம் எங்கள் குடும்பத்தில் ஒருவர் – ஐஸ்வர்யா ராய்!

மணிரத்னம் எங்கள் குடும்பத்தில் ஒருவர் – ஐஸ்வர்யா ராய்!

1062
0
SHARE
Ad

Aishwarya-Rai-சென்னை, மே 27 – மணிரத்னம் படத்தில் நடிப்பது உண்மைதான் ஏனெனில் அவர் எங்கள் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயிடம் மீண்டும் நடிப்பது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது,

“மணிரத்னம் படத்திலும், இந்தி பட இயக்குனர் சஞ்சய் குப்தா படத்திலும் நடிப்பது உண்மைதான். இப்படங்களில் நடிப்பதற்கு காரணம் படத்தின் கதைதான். இரண்டு பட கதையுமே என்னை கவர்ந்தது.

#TamilSchoolmychoice

மணிரத்னம் படத்தில் நடிப்பதென்பது எனக்கும் சரி, என் கணவர் அபிஷேக்கிற்கும் சரி ரொம்பவே சந்தோஷமான விஷயம். அவர் தனித்துவம் மிக்க இயக்குனர். ஒவ்வொரு முறையும் அவர் ஆக்கப்பூர்வமான ஒரு விஷயத்தை கையாள்கிறார்.

பட குழுவினர் ஒட்டுமொத்தமாக அவரை விரும்புவதற்கு இதுதான் காரணம். மேலும் அவர் எங்கள் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் போன்றவர்” என  ஐஸ்வர்யாராய் கூறியுள்ளார்.