Home இந்தியா மோடியின் செய்தியுடன் பிரதமர் இணையதளம் புதுப்பிப்பு!

மோடியின் செய்தியுடன் பிரதமர் இணையதளம் புதுப்பிப்பு!

469
0
SHARE
Ad

modi-websiteபுதுடில்லி, மே 27 – இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது முதல் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு என்று தனியாக இணையதளம் இயங்கி வருகிறது.

புதிய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற, அடுத்த 2 விநாடியில் இந்த இணையதளத்தில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் படங்கள் அகற்றப் பட்டு நரேந்திர மோடியின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், நாட்டு மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள முதல் செய்தியும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னுடைய சக இந்தியர்களுக்கும், உலக மக்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். 2014 மே 16-ல் நாட்டு மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

நாட்டின் வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்காக அவர்கள் வாக்களித்துள்ளனர். இந்தியாவின் வளர்ச்சி பயணம், இதுவரை இல்லாத உச்சத்தை எட்டும் வகையில் எங்களை அர்ப்பணித்துள்ளோம்.

அதற்காக நாட்டு மக்களின் ஆதரவு, ஆசீர்வாதம் மற்றும் சீரிய பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம். அதனுடன் உலக அமைதி, வளர்ச்சியில் நாம் இந்தியாவை இணைத்து கொள்வோம். www.pmindia.nic.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் மோடியின் சுயவிவரமும் இடம்பெற்றுள்ளது.

இந்த இணையதளம், நம்மிடையேயான தகவல் தொடர்புக்கு முக்கிய மேடையாக திகழும். தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் சக்தியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த இணையதளம் கவனிக்கவும், கற்றுக்கொள்ளவும், ஒவ்வொருவரின் கருத்துக்களை பரிமாறி கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

என்னுடைய பேச்சுக்கள், தினசரி நடவடிக்கைகள், வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் நீங்கள் அறிய முடியும். மத்திய அரசின் புதுமையான நடவடிக்கைகள் குறித்தும் உங்களுக்கு இதன் வாயிலாக தெரிவிக்கிறேன்” என நரேந்திர மோடி கூறியுள்ளார்.