Home அவசியம் படிக்க வேண்டியவை “ஆட்சியை பறிகொடுத்துவிடாதீர்கள்” – அம்னோவிற்கு முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

“ஆட்சியை பறிகொடுத்துவிடாதீர்கள்” – அம்னோவிற்கு முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

544
0
SHARE
Ad

World Match Racing Tour. Monsoon Cupகோலாலம்பூர், மே 30 – தேசிய முன்னணி ஆட்சியில் நடக்கும் ஊழலையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்த பொதுத்தேர்தலில் ஆட்சியே மாறிவிடும் என்று அம்னோவின் முன்னாள் தலைமைச் செயலாளரான டான்ஸ்ரீ சபாருடின் சீக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சபாருடின் நேற்று வெளியிட்டுள்ள கருத்தில், நாட்டில் இளம் தலைமுறையினர் மிகத் தெளிவாக இருப்பதாகவும், அவர்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

“அரசியலில் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வந்து, ஊழலை ஒழித்துக் காட்ட பிரதமர் நஜிப் முயற்சி எடுக்க வேண்டும். தேசிய முன்னணி இப்போது மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இளம் தலைமுறையினரின் வாக்குகள் திசைமாறிவிட்டன. இனியும் இந்த நிலை தொடருமானால் மக்கள் மத்தியில் தேசிய முன்னணிக்கு ஆதரவு மேலும் சரியும். இதனால் அடுத்த பொதுத்தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டி வரும்” என்று முன்னாள் அமைச்சரான சபாருடின் சீக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice