Home நாடு இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் குரு – சபாருடின் சிக் காலமானார்

இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் குரு – சபாருடின் சிக் காலமானார்

478
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் குருவும் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான சபாருடின் சிக் காலமானார்.

இஸ்மாயில் சாப்ரி தற்போது தெமர்லோ அம்னோ தொகுதியின் தலைவராக இருக்கிறார். முன்பு சபாருடின் சிக் இந்தத் தொகுதியின் தலைவராக இருந்தபோது, இஸ்மாயில் சாப்ரியை தொகுதி நிர்வாகக் குழு உறுப்பினராக 1987-இல் நியமித்தார் சபாருடின் சிக். அப்போது இஸ்மாயில் சாப்ரியின் வயது 27-தான்.

பின்னர், தெமர்லோ தொகுதியின் தகவல் பிரிவு தலைவராகவும் இஸ்மாயில் சாப்ரியை, சபாருடின் சிக் நியமித்தார்.

#TamilSchoolmychoice

அங்கிருந்துதான் இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் பயணமும் தொடங்கியது.

இஸ்மாயில் சாப்ரியின் செயல் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட சபாருடின் சிக், இஸ்மாயில் சாப்ரியை தனது அரசியல் செயலாளராகவும் 1995-இல் நியமித்தார்.

சபாருடின் சிக் மறைவுக்கு இஸ்மாயில் சாப்ரி தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.