புதுடில்லி : உலகம் எங்கும் கொவிட்-19 பாதிப்புகள் தணிந்து வருவதாக கருதப்பட்ட வேளையில், ஓமிக்ரோன் என்ற புதிய ஒருமாறியத் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவத் தொடங்கியுள்ளது.
மலேசியாவில் முதல் ஓமிக்ரோன் தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரையில் மூன்று ஓமிக்ரோன் உருமாறியத் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில் கொவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 35 மில்லியனை நெருங்கி வருகிறது.
ஓமிக்ரோன் தொற்று கண்டவர்களில் ஒருவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். 72 வயதான அவர் சிம்பாப்வே நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வந்தவராவார். கடந்த நவம்பர் 28-ஆம் தேதி அவர் நாடு திரும்பினார்.
இன்று சனிக்கிழமை (டிசம்பர் 4) 8,603 தொற்றுகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டன. மரண எண்ணிக்கை 415 என ஒருநாளில் பதிவாகி மொத்த மரண எண்ணிக்கை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி 470,530 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.