இஸ்லாமாபாத் :கிழக்கு இலங்கையிலுள்ள ஊர் சியால்கோட். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர். அவரின் பெயர் அடையாளப்படுத்தப்படவில்லை.
இஸ்லாம் குறித்த புனித வாசகங்களைக் கொண்ட பதாகை ஒன்றை அந்த இலங்கை நிர்வாகி கிழித்து வீச உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தொழிற்சாலை ஊழியர்கள் ஒன்று திரண்டு அந்த நிர்வாகியைத் தாக்கித் துன்புறுத்தி, உயிரோடு எரித்துக் கொலை செய்திருக்கிறார்கள்.
இதுவரையில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் மீதான விசாரணைகளைத் தான் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும், குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கிடைப்பதைத் தான் உறுதி செய்யப் போவதாகவும் இம்ரான் கான் மேலும் கூறினார்.
சியால்கோட் நகரின் வீதிகளில் இந்த சம்பவம் தொடர்பில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதாக தொலைக்காட்சி செய்திகள் காட்டின என்றும் கூறப்படுகிறது.