Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர்ஏசியாவின் 2.5 மில்லியன் இலவச இருக்கைகள், சிறப்பு சலுகைகள்!

ஏர்ஏசியாவின் 2.5 மில்லியன் இலவச இருக்கைகள், சிறப்பு சலுகைகள்!

650
0
SHARE
Ad

airasia-plane-with-url-on-side-665x38911கோலாலம்பூர், ஜூன் 2 – குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியா 2.5 மில்லியன் இலவச இருக்கைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்காக அளித்துள்ளது.

இந்த திட்டத்தில் முன்பதிவு செய்யும் பயணிகள், விமான நிலைய வரி, எண்ணெய் கட்டணம் மட்டும் செலுத்தி மலேசியாவிலுள்ள லங்காவி, ஜோகூர் பாரு, கோத்தா கினபாலு மற்றும் அண்டை நாடுகளான சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இந்தியா ஆகிய இடங்களுக்கு பயணம் செய்யலாம்.

இதற்கான முன்பதிவை வரும் ஜூன் 2 -ம் தேதி முதல் ஜூன் 8 -ம் தேதி வரை செய்யலாம். இந்த பதிவைப் பயன்படுத்தி 2015 -ம் ஆண்டு ஜனவரி 5 முதல் ஜூலை 31 -ம் தேதி வரை பயணம் செய்யலாம்.

#TamilSchoolmychoice

இதுதவிர, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, தைவான், நேப்பாள், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்கான கட்டணங்களிலும் ஏர்ஏசியா சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகைகள் 199 ரிங்கிட் முதல் தொடங்குகின்றன. இதற்கான முன்பதிவு இப்பொழுது நடைபெற்று வருகின்றது.

மேல் விபரங்களுக்கு ஏர்ஏசியாவின் அகப்பக்கமான www.airasia.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.