Home கலை உலகம் தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு!

தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு!

674
0
SHARE
Ad

nayantaraசென்னை, ஜூன் 2 – தனது வாழ்க்கை கதையை படமாக எடுக்க நயந்தாரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நயன்தாரா திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள், காதல் சர்ச்சைகள் அனைத்தையும் உள்ளடக்கிய படமாக எடுக்க ஒரு புதிய இயக்குநர் நயந்தாராவை அணுகினார். ஆனால் தனது வாழ்க்கையை படமாக எடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நயன்தாரா 2005–ல் ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சந்திரமுகி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். நிறைய வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வயப்பட்டார். சில மாதங்களிலேயே அது முறிந்தது. அதன்பிறகு இயக்குநர் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம்வரை வந்தனர். இதற்காக மதம் மாறவும் செய்தார் நயந்தாரா. ஆனால் கடைசி நேரத்தில் இதுவும் முறிந்து போனது. தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நயந்தாராவின் வாழ்க்கையை படமாக்கினால் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என கருதி புது இயக்குநர் ஒருவர் அதற்காக திரைக்கதையை உருவாக்கியுள்ளார். நயன்தாராவிடம் இதற்கான அனுமதி கேட்டு அணுகினார். நயன்தாரா இதற்கு சம்மதிக்கவில்லை. தன் வாழ்க்கையை படமாக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.