Home இந்தியா தமிழகத்திற்கு இனி தண்ணீர் தர இயலாது

தமிழகத்திற்கு இனி தண்ணீர் தர இயலாது

621
0
SHARE
Ad

muthalvarபெங்களூர், பிப்.18-  காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது, என மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் (படம்) இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி செல்லும் அனைத்துக் கட்சி குழுவினர் காவிரி விவகாரம் தொடர்பாக சந்தித்து பேச உள்ளதாக கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கூறிய ஷெட்டர் இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் இந்த விவகாரத்தில் அரசு வழக்கறிஞரை மாற்றும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து இன்று தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் ஷெட்டர் தலைமையிலான அனைத்துக் கட்சி குழு மாலையில் பிரதமரை சந்திக்க இருக்கின்றனர்.