Home இந்தியா ஜெய்ப்பூரில் மலேசிய சுற்றுப் பயணி மீது பாலியல் பலாத்காரம் – ஒருவர் கைது

ஜெய்ப்பூரில் மலேசிய சுற்றுப் பயணி மீது பாலியல் பலாத்காரம் – ஒருவர் கைது

616
0
SHARE
Ad

jaipur_img1ஜெய்ப்பூர், ஜூன் 7 – இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கதையாகி வரும் வேளையில், மலேசியாவைச் சேர்ந்த சுற்றுப் பயணி ஒருவரும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மலேசியாவை சேர்ந்த அந்த சுற்றுப் பயணிப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை அந்த மாநிலப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் மலேசிய பெண் ஒருவர் வர்த்தகம் தொடர்பாக வந்துள்ளார். ஜெய்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர் வியாழன் அன்று இரவு வர்த்தக ரீதியாக ஒருவரை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

பின்னர் இருவரும் காரில் சென்றுள்ளனர். அப்போது மறைவான பகுதிக்கு காரை கொண்டு சென்ற அந்த ஜெய்ப்பூர் நபர் மலேசிய பெண்ணை  காருக்குள் வைத்து பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அவர் அந்த மலேசியப் பெண்ணை போதை வாஸ்துகளை உட்கொள்ள செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை அவர் தங்கியிருந்த விடுதி முன்பு இறங்கிவிட்டு சென்றுவிட்டார்.

இதனையடுத்து அந்தப் பெண் மிகுந்த சிரமத்திற்கிடையில் நடந்து சென்று அருகில் இருந்த போலீஸ் வாகனத்தை அடைந்துள்ளார்.

அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜவகர் பகுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அந்த நகரில் உள்ள பில்வரா பகுதியில் பலாத்காரம் செய்த நபர் தங்கியிருப்பதை கண்டுபிடித்து அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

உள்நாட்டில், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் குற்றங்களுக்கு மத்தியில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.