Home இந்தியா “திட்டமிடப்பட்ட சதி” – மலேசியப் பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மறுப்பு!

“திட்டமிடப்பட்ட சதி” – மலேசியப் பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மறுப்பு!

470
0
SHARE
Ad

jaipur_img1ஜெய்ப்பூர், ஜூன் 7 – மலேசியப் பெண்மணி ஒருவரைக் கற்பழித்ததாக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இன்று மாலை இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அந்த ஆடவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

“நான் அந்தப் பெண்ணைக் கற்பழிக்கவில்லை. இந்த விவகாரத்தில் நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்.இது திட்டமிடப்பட்ட சதி” என்று அந்த ஆடவர் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், மருத்துவப் பரிசோதனைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரே, காவல் துறை சொல்வது சரியா, பெண்ணின் குற்றச்சாட்டு சரியா, அல்லது கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் கூறுவது சரியா என்பது தெளிவாகும்.