Home நாடு பாண்டா கரடிகளுக்குப் பதிலாக சீனாவிற்கு இரண்டு டாபிர் – பழனிவேல் பரிந்துரை

பாண்டா கரடிகளுக்குப் பதிலாக சீனாவிற்கு இரண்டு டாபிர் – பழனிவேல் பரிந்துரை

564
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 12 – மலேசியா – சீனா இடையிலான 40 ஆண்டு கால உறவை கொண்டாடும் விதமாக சீனாவில் இருந்து இரண்டு பாண்டா கரடிகள் அண்மையில் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த இரண்டு பாண்டா கரடிகளுக்குப் பதிலாக மலேசியாவில் இருந்து இரண்டு டாபிர் அனுப்பி வைக்கப்படும் என்று இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ பழனிவேல் நேற்று தெரிவித்துள்ளார்.

மலேசிய அரசாங்கம் சீனாவின் பதிலுக்காக காத்திருக்கிறது என்றும், அவர்கள் அனுமதி வழங்கினால் உடனடியாக இரண்டு டாபிர்கள் சீனாவிற்கு அனுப்பப்படும் என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

OLYMPUS DIGITAL CAMERA

டாபிர் என்ற விலங்கு பன்றி போல் உருவமைப்பிலும், சாம்பல் நிறத்திலும் இருக்கும்.

இதனிடையே, தேசிய மிருகக்காட்சி சாலையில் இருக்கும் சீனாவின் இரண்டு பாண்டா கரடிகளைப் பார்வையிட பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவது குறித்து தான் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 7 முதல் 10 நாட்கள் வரை இலவசமாக பார்வையிடும் அனுமதி வழங்கப்படலாம் என்றும் பழனிவேல் தெரிவித்தார்.