Home உலகம் இஸ்ரேல் புதிய அதிபராக ரியூவன் ரிவ்லின் அடுத்த மாதம் பதவியேற்பு : ஒபாமா வாழ்த்து!

இஸ்ரேல் புதிய அதிபராக ரியூவன் ரிவ்லின் அடுத்த மாதம் பதவியேற்பு : ஒபாமா வாழ்த்து!

598
0
SHARE
Ad

Reuven Rivlin,ஜெருசலேம், ஜூன் 12 – இஸ்ரேலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட ரியூவன் ரிவ்லின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் அதிபர் தேர்தல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு அதிபரை தேர்ந்தெடுக்கின்றனர்.

அங்கு தற்போது ஷிமோன் பெரஸ் அதிபர் பதவி வகித்துவந்தார். அவரது பதவிக்காலம் முடியும் நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ரியூவன் ரிவ்லினும் எதிர்க்கட்சி சார்பில் ஷீட்ரிட்டும் போட்டியிட்டனர்.

இதில் புதிய அதிபராக 74 வயது ரியூவன் ரிவ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 120 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ரியூவன் ரிவ்லின் 63ஒட்டுக்களையும், ஷீட்ரிட் 53 ஓட்டுக்களையும் பெற்றனர்.

#TamilSchoolmychoice

புதிய அதிபர் ரியூவன் அடுத்த மாதம் 24–ந் தேதி பதவி ஏற்கிறார். இந்த நாட்டில் பிரதமருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் தரப்பட்டுள்ளன. அதிபர் பதவி வெறும் அலங்காரப் பதவி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

obamaஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து:

இஸ்ரேலின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரியுவென் ரிவ்லினுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஜனநாயகத்தை அங்கீகரிப்பது, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு எங்களது ஆதரவு தொடர்ந்து நீடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.