Home இந்தியா மம்தா பானர்ஜியை பாராட்டிய பிரதமர் மோடி!

மம்தா பானர்ஜியை பாராட்டிய பிரதமர் மோடி!

556
0
SHARE
Ad

mamata-banerjeeபுதுடில்லி, ஜூன் 12 – மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டினார். நேற்று நாடாளுமன்ற அவையில் மோடி பேசுகையில்,

“மேற்கு வங்காளத்தில் 35 ஆண்டுகளில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதற்கு எனது சகோதரி மம்தா பானர்ஜி உண்மையிலேயே கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கு வங்காளத்தில் வளர்ச்சி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசிய மோடி, இப்போது அந்த அரசின் பணிகளை பாராட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட்டாட்சி ஒத்துழைப்பு அடிப்படையில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றும் மோடி கூறினார்.

34 உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற அவையில் 4-ஆவது பெரிய கட்சியாக விளங்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்கள் சார்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மோடி அரசுடன் ஒத்துழைக்கும் என்று அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ககோலி கோஷ் தஸ்திடார் ஏற்கனவே உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.