Home உலகம் ஈராக்கின் மோசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்: 5 லட்சம் மக்கள் வெளியேற்றம்! 

ஈராக்கின் மோசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்: 5 லட்சம் மக்கள் வெளியேற்றம்! 

584
0
SHARE
Ad

iraq3

பாக்தாத், ஜூன் 12 – ஈராக்கில் தீவிரவாதிகளுக்கும் அரசு படையினருக்கும் நடந்த கடும் சண்டையில் தீவிரவாதிகள் மோசுல் நகரை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து 5 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈராக்கின் நினிவே மாகாணத்தின் தலைநகரான மோசூலில் கடந்த சில நாட்களாகவே அரசு படையினருக்கும், ஈராக்கிய இஸ்லாமியத் தேசம் என்ற அமைப்பின் தீவிரவாதிகளுக்கும் இடையே பலத்த சண்டை நடந்து வருகின்றது. பல்வேறு காவல் நிலையங்களை தீவிரவாதிகள் தீயிட்டுக்கொளுத்தினர். ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவித்தனர்.

#TamilSchoolmychoice

தீவிரவாதிகளின் இந்த அதிரடி தாக்குதலால், அப்பகுதி முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான ஈராக்கில் இரு பிரிவினராக இருக்கும் சன்னி மற்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ள பிரிவினைவாதமே இத்தகைய தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி முஸ்லிம்களுடன் இணைந்து செயல்பட்டு சட்டம் ஒழுங்கை சீர் செய்யுமாறு, அந்நாட்டின் பிரதமர் நூரி அல் மாலிக்கியிடம் அமெரிக்கா கூறியுள்ளது.