Home நாடு 24 மணி நேரத்திற்குள் அந்நிய தொழிலாளர்களை அழைத்துச் செல்லுங்கள் – முதலாளிகளுக்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கை

24 மணி நேரத்திற்குள் அந்நிய தொழிலாளர்களை அழைத்துச் செல்லுங்கள் – முதலாளிகளுக்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கை

503
0
SHARE
Ad

ahmad zahidகோலாலம்பூர், ஜூன் 12 – வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் அந்நிய தொழிலாளர்களை, மலேசியாவிற்கு வந்து இறங்கிய 24 மணி நேரத்திற்குள் முதலாளிகள் வந்து அழைத்துச் செல்லவேண்டும். இல்லையேல் அவர்கள் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்று நேற்று கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தை பார்வையிட்டப் பின் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவ்வாறு தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், அந்த செலவை முதலாளிகள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சாஹிட் தெரிவித்தார்.

அந்நிய தொழிலாளர்கள் வந்திறங்கியவுடன், 72 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற முன்பிருந்த இந்த அவகாசம், இனி 24 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஏற்படும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனவே, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மீட்டுக் கொள்ளாமல் இருக்கின்ற அந்நியத் தொழிலாளர்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ளுமாறு முதலாளிகளுக்கு உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு மீட்டுக் கொள்ளாத முதலாளிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்றும் சாஹிட் எச்சரிக்கை விடுத்தார்.