Home கலை உலகம் நடிகை அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை! தந்தை திடீர் மறுப்பு!

நடிகை அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை! தந்தை திடீர் மறுப்பு!

663
0
SHARE
Ad

amalapalகொச்சி, ஜூன் 12 – நடிகை அமலாபால் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. அங்கு பிரார்த்தனை மட்டுமே நடந்தது என அவரது தந்தை பால் வர்கீஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். நடிகை அமலாபாலுக்கும், பிரபல இயகுநர் விஜய்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர்.

அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இரு மத வழக்கத்தின்படி திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். இதன்படி, கேரளா மாநிலம் ஆலுவாவில் உள்ள கோவிலில் திருமண நிச்சயதார்த்தமும், பின்னர் சென்னையில் 12-ம் தேதி இந்து முறைப்படி திருமணமும் செய்யப்போவதாக இருவரும் அறிவித்தனர்.

இதன்படி கடந்த 7-ஆம் தேதி கொச்சி அருகேயுள்ள ஆலுவா செயின்ட் ஜூட் ஆலயத்தில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இருவரும் கோவிலில் மோதிரத்தை மாற்றிக் கொண்ட படங்களும் வெளியானது.

#TamilSchoolmychoice

Director Vijay & Actress Amala Engagementஇந்நிலையில், நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இதை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எர்ணாகுளம் பிஷப்புக்கு  ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னுடைய மகள் அமலாபால் ஆலுவா செயின்ட் ஜூட் ஆலயத்தின் அருகேயுள்ள வீட்டில்தான் பிறந்து வளர்ந்தார்.

எனவே, அவர் சிறு வயது முதலே இந்த ஆலயத்திற்குதான் சென்று வருகிறார். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவர் இந்த ஆலயத்தில் சென்று பிரார்த்திப்பது உண்டு. அவர் திருமணத்திற்கு முன் ஆலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்ய தீர்மானித்தார். இதன்படி கடந்த 7-ஆம் தேதி ஆலயத்தில் பிரார்த்தனை மட்டுமே நடத்தினார்.

கத்தோலிக்க மரபுபடி திருமண நிச்சயதார்த்தமோ வேறு நிகழ்ச்சியோ நடக்கவில்லை. ஆலயத்தில் பிரார்த்தனை 10 நிமிடம் மட்டுமே நடந்தது. ஆலயத்தில் எனது மகளின் நிச்சயதார்த்தம் நடந்ததாக பத்திரிகைகளில் வந்த தகவல் தவறானதாகும்  என அமலாபாலின் தந்தை கூறியுள்ளார்.

அமலாபாலும், விஜய்யும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. எனினும், திருமணத்திற்கு தடை ஏதுமில்லை என இருதரப்பினரும் கூறுகின்றனர்.