Home Photo News லுங்கிக் கவர்ச்சியில் கலக்கிய அமலா பால்

லுங்கிக் கவர்ச்சியில் கலக்கிய அமலா பால்

2355
0
SHARE
Ad

சென்னை – இயக்குநர் விஜய்யுடன் மணமுறிவு ஏற்பட்டாலும், தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு பெற்றுவருகிறார் அமலா பால். இடையிடையே சில நடிகர்களுடன் கிசுகிசுக்களிலும் சிக்கியுள்ளார் அமலா பால்.

அந்த வரிசையில் அண்மையில் சமூக ஊடகங்களால் அமலா பாலுடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டவர் நடிகர் விஷ்ணு விஷால். பின்னர் அந்தத் தகவலை மறுத்தார் விஷ்ணு விஷால்.

சில நாட்களுக்கு முன்னர் தூக்கிக் கட்டிய லுங்கியுடன், தனது அழகிய கால்கள் தெரிய, அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலவிட்ட ஒரு புகைப்படப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

அந்தப் படத்தின் மூலம் ஏற்பட்ட இன்னொரு சர்ச்சை என்னவென்றால், அவர் நின்றிருக்கும் இடம் கள் அருந்தும் இடம் என்றும் பதிவிட்டிருக்கிறார். “லுங்கிகளின் தேசத்துக்கு வாருங்கள். இங்கே எல்லோரும் கள் அருந்துகிறார்கள். அப்பம், மீன் கறி கிடைக்கிறது. உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்” என அவர் போட்டிருக்கும் பதிவைத் தொடர்ந்து அவர் கையில் வைத்திருப்பது கள் குவளை என சமூக ஊடகங்களில் வலைத்தள வாசிகள் (நெட்டிசன்ஸ்) சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றனர்.

இந்த சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வருமுன்னரே அடுத்தடுத்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கிறார் அமலா பால். இதற்கு முன்னரும் கூட தனது கவர்ச்சிப் படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மகிழ்ந்தவர்தான் அமலா பால்.

அந்தப் படக் காட்சிகளில் சில: