Home One Line P2 இன்ஸ்டாகிராம் பதிவுகள் : அமலா பால் உல்லாச உலா காட்சிகள்

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : அமலா பால் உல்லாச உலா காட்சிகள்

1327
0
SHARE
Ad

சென்னை : இந்திய சினிமாத் திரையுலகம் கொவிட்-19 பாதிப்புகளால் முடங்கிக் கிடக்கும் நிலையில், பல்வேறு நடிகர் – நடிகையர் சமூக ஊடகங்களில் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

இரசிகர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க, தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அழகழகாக புகைப்படங்கள் எடுத்து அவற்றை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதுதான் இன்றைய தலைமுறை இளம் நட்சத்திரங்களின் முக்கியப் பொழுதுபோக்கு.

பிரபல நடிகை அமலா பால்லும் அதற்கு விதி விலக்கல்ல! இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் திருமண முறிவு, கொவிட்-19 முடக்கம், அதிகமான படங்கள் இல்லாத சூழலிலும் அமலா பால் உல்லாசத் தளங்களுக்கு செல்வதிலும் அங்கு நண்பர்களுடன் கும்மாளமடிப்பதையும், அதைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் அமலா பால்.

#TamilSchoolmychoice

அவரது அழகான, கவர்ச்சியான படங்களுக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 3.7 மில்லியன் பின்தொடர்பாளர்கள் தொடர்ந்து பின் தொடர்கிறார்கள்.

அண்மையில் அவர் சென்றிருந்த சில உல்லாசத் தளங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே காணலாம்: