

சென்னை : தமிழ்ப்பட இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. தமிழ் இரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர். பின்னர் தெலுங்குப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்த காலத்தில் பல நடிகர்களுடன் இணைத்து அவரைப் பற்றிய வதந்திகள் பரவின.
தெலுங்கில் தன்னுடன் படங்களில் நடித்த நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டார். அவரையே கல்யாணமும் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து கணவர் நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்ற பெயரை இணைத்துக் கொண்டு சமந்தா அக்கினேனி ஆனார்.
அதில் அதிகமான இரசிகர்களால் விரும்பப்படுபவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் சமந்தா. அண்மைய ஆண்டுகளில் திரைப்படங்களில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்றார். “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படம் அதற்கோர் உதாரணம்.
திருமணம் ஆனாலும் சமந்தாவின் கவர்ச்சியும் குறையவில்லை. துணிந்து பல படங்களில் கவர்ச்சியான தோற்றத்தில் வலம் வந்தார்.
தற்போது சுமார் 17 மில்லியன் பின்தொடர்பாளர்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டிருக்கிறார் சமந்தா.
சமந்தாவின் புதிய அதிரடி, விடுதலைப் புலி வீராங்கனை ராஜியாக அவர் அவதாரம் எடுத்திருப்பது. கட்டண வலைத்திரையான அமேசோன் பிரைம் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 4-ஆம் தேதி வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது “தி பேமிலி மேன்” என்ற வலைத் தொடர் (வெப் செரீஸ்).
தனது தோற்றத்தைக் கறுப்பாக மாற்றிக் கொண்டு, இலங்கைத் தமிழில் சரளமாக உரையாடும் பாத்திரத்தில் சமந்தா கலக்கியிருப்பதால் சமூக ஊடகங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்ட படக் காட்சிகளில் சிலவற்றை இங்கு காணலாம்:



