Home Photo News இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “மாஸ்டர்” : காத்திருக்கும் மாளவிகா மோகனன்

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “மாஸ்டர்” : காத்திருக்கும் மாளவிகா மோகனன்

1108
0
SHARE
Ad

சென்னை – “மாஸ்டர்” திரைப்படத்திற்காகக் காத்திருப்பது நடிகர் விஜய்யும் அவரது இரசிகர்களும் மட்டுமல்ல!

அதில் நடித்திருக்கும் மற்ற நடிக, நடிகையரும்தான்!

படத்தின் தயாரிப்பாளரும் ஆவலுடன் காத்திருக்கிறார். கோடிக்கணக்கான பணம் இந்த ஒரு படத்தில் மட்டும் முடங்கியிருப்பதாக தமிழ்த் திரையுலகினர் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

எப்போது திரைப்படத் திரையரங்குகள் முழுமையாக இயங்கும் என்பது இந்தியாவில் இன்னும் தெரியவில்லை. அதுவரையில் மாஸ்டர் படம் வெளிவருவதற்கும் வாய்ப்பில்லை.

பெரும் தொகை கொடுத்து கட்டண இணைய நிறுவனங்கள் (ஓடிடி) மாஸ்டர் படத்தை நேரடியாக வெளியிடுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், திரையரங்கில்தான் திரையிடுவோம் என தயாரிப்பாளர் தரப்பும், நடிகர் விஜய் தரப்பும் உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள்.

மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனனும் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் படத்திற்காகக் காத்திருக்கிறார். அவர் மட்டுமா?

அவருக்காக, அவரது இரசிகர்களும் மாளவிகாவுக்காகக் காத்திருக்கின்றனர். ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் சிறிய பாத்திரம்தான் மாளவிகாவுக்கு! அதிலும் பாதிப் படத்தில் கல்லாரி மாணவி மகளுக்கு அம்மா கதாபாத்திரம். இருந்தாலும் கவர்ந்தார்.

மாஸ்டர் படத்திலோ அதிரடியாக விஜய்க்கு இணையாகியுள்ளார்.

படம் வெளிவரும்வரை, தொடர்ந்து தனது அழகிய, கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதுதான் மாளவிகாவின் இப்போதைய பொழுதுபோக்கு.

தினமும் அவர் வெளியிட்டு வரும் அவரது புகைப்படங்களுக்கான இரசிகர்களும் ஏராளம். 1.5 மில்லியன் பேர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்கிறார்கள்.

மாளவிகா மோகனனின் அண்மைய இன்ஸ்டாகிராம் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: