Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தோனேசியாவின் மண்டாலாவை வாங்கும் திட்டத்தை கைவிட்டது ஏர்ஏசியா!

இந்தோனேசியாவின் மண்டாலாவை வாங்கும் திட்டத்தை கைவிட்டது ஏர்ஏசியா!

680
0
SHARE
Ad

tony_fernandez(1)பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13 – இந்தோனேசியாவின் மலிவு விலை விமான நிறுவனமான டைகர் ஏர் மண்டாலாவை வாங்கும் திட்டத்தை ஏர்ஏசியா நிறுவனம் கைவிட்டுள்ளது என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் டைகர் ஏர்வேஸ் நிறுவனம் மண்டாலாவிலுள்ள 35.8 சதவிகித பங்கை விற்க முன்வந்தது. அதை ஏர்ஏசியா நிறுவனம் வாங்க முன்வந்தது.

இந்நிலையில் டோன் ஃபெர்னாண்டஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண்டாலாவை வாங்கும் திட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்குகின்றோம். நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இந்த பரிமாற்றம் வேண்டாம் என்று முடிவெடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஏர்ஏசியா இந்தோனேசியா நன்றாக செயல்பட்டு வருவதாகவும், அதன் மூன்றாம், நான்காம் காலாண்டு சிறப்பாக உள்ளதாகவும் டோனி கூறியுள்ளார்.

இந்தோனேசியாவிற்கு மட்டும் வருடத்திற்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து வருவதாக ஏர்ஏசியா அறிவித்துள்ளது.