Home தொழில் நுட்பம் சாம்சுங்கின் கேலக்ஸி எஃப் புகைப்படங்கள் வெளியாகின!

சாம்சுங்கின் கேலக்ஸி எஃப் புகைப்படங்கள் வெளியாகின!

631
0
SHARE
Ad

Samsung-Galaxy-Fஜூன் 16 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங்கின் புதிய திறன்பேசிகள் பற்றிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த புதிய திறன்பேசியானது சாம்சங்கின் அடுத்த தயாரிப்பான சாம்சுங் கேலக்ஸி F என்று கூறப்படுகின்றது.

சாம்சுங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கேலக்ஸி S5 வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பினை உருவாக்கும் நோக்கத்தோடு களம் இறங்கி உள்ளது.

#TamilSchoolmychoice

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களின் படி, இந்த கேலக்ஸி F திறன்பேசியானது தங்கநிற பேனலைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திறன்பேசியானது 5.1 அங்குல அளவும், 2560 x 1440 பிக்சல் தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.5GHz வேகம் உடைய ‘ஸ்நாப் டிராகன் 805 செயலி’ (Snapdragon 805 Processor), பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாக கூறப்படுகின்றது.

இவற்றுடன் 32ஜிபி நினைவகம், 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கேமரா, 2 மெகாபிக்சல்களை உடைய காணொளி அழைப்புகளுக்கான கேமரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

சாம்சுங் நிறுவனம் இந்த புதிய திறன்பேசியினை பற்றி எவ்வித அதிகாரபூர்வமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. எனினும் சாம்சுங் கேலக்ஸி F ஆனது எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.