கோலாலம்பூர், ஜூன் 17 – நாடெங்கிலும் சுமார் 30,000 – த்திற்கும் அதிகமான இந்திய மக்கள், இன்னும் மலேசிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமல் சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்பதாக பிரதமர் துறையின் கீழ் இயங்கும் இந்திய சமுதாயத்தின் சிறப்பு பணிப் பிரிவான எஸ்ஐடிஎப் (Special Implementation Task Force) அறிவித்துள்ளது.
சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்போர் அனைவரும், அவர்களின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் படி நாடெங்கிலும், “சிவப்பு அடையாள அட்டை நடவடிக்கை” -ன் கீழ் பிரச்சாரம் தொடங்கவுள்ளதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் டத்தோ என்.சிவ சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இந்திய மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் இருந்து, தேசிய பதிவிலாகாவின் உதவியோடு இந்த நடவடிக்கை துவங்கப்படும் என்றும் சிவ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 21 -ம் தேதி கூலிம், கெடா ஆகிய மாநிலங்களிலும், ஜூன் 29 -ம் தேதி பேராக், புருவாஸிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிவ சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.