வளைகுடா அரபு நாடுகள் கூட்டுறவு கழகமான, “ஜி.சி.சி’, பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
“அராபியன் பிசினஸ்’ என்ற, இதழில் வெளியிடப்பட்டுள்ள, இந்திய செல்வந்தர்களின், விவரம் வருமாறு:-
துபாயில் உள்ள, “லேண்ட்மார்க்’ குழுமத்தின் நிறுவனர், மிக்கி ஜக்தியானி, முதல் இடத்தை வகிக்கிறார்.
லண்டனில், ஒரு கார் ஓட்டுனராக தன் வாழ்க்கையை தொடங்கிய, மிக்கி ஜக்தியானியின் சொத்து மதிப்பு, இரண்டு லட்சத்து, நாற்பதாயிரம் கோடி ரூபாயாகும்.
இரண்டாவது இடத்தில் உள்ளவர், உணவக தொழிலில் புகழ்பெற்ற, பெரோஸ் அலானா.
இவரது சொத்து மதிப்பு, இரண்டு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய்.
இந்தியாவை சேர்ந்த, தொழிலதிபர்களான ரகு கட்டாரியா, யூசுப் அலி, பி.ஆர்.ஷெட்டி உள்ளிட்டோர், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
“ஜம்போ எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் தலைவரான வித்யா சாப்ரா, பணக்கார இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள, பெண் தொழிலதிபர், என்ற பெருமை பெற்றுள்ளார்.