Home கலை உலகம் பாலிவுட்டின் முன்னணி நடிகையாகிறார் தமன்னா

பாலிவுட்டின் முன்னணி நடிகையாகிறார் தமன்னா

701
0
SHARE
Ad

tamanaஇந்தியா, பிப்.18- கோலிவுட்டிலிருந்து, பாலிவுட்டுக்கு சென்ற, நடிகை தமன்னாவுக்கு, அதிர்ஷ்டகாற்று, சற்று பலமாகவே அடிக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் கவனம், தமன்னா பக்கம் திரும்பியுள்ளது தான், இதற்கு காரணம்.

அஜய் தேவ்கனுடன், “ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்து வருகிறார், தமன்னா.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பே  இன்னும் முடிவடையாத நிலையில், நடிகர் அஜய் தேவ்கன், தமன்னா புகழ் பாடத் துவங்கியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், பாலிவுட்டில் உள்ள, தன் நெருங்கிய நண்பர்களான, அக்ஷய் குமார், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகியோரிடமும், தமன்னாவின் அழகு, நடனம், நடிப்புத் திறமையை பற்றி, வெகுவாகப் பாராட்டியுள்ளாராம்.

இதனால், இந்த மூன்று நடிகர்களின், அடுத்த படங்களில், கண்டிப்பாக, தமன்னாவை எதிர்பார்க்கலாம் என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.

அதுவும், சல்மான் கானுடன் ஜோடி போட்டு விட்டால், ஒரு இரவிலேயே, முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பெற்று விடுவார், தமன்னா.

இதனால், பாலிவுட் முன்னணி நடிகைகள், கலக்கம் அடைந்துள்ளனர்.