Home நாடு சரவாக், புக்கிட் அசெக் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோ லெங் காலமானார்.

சரவாக், புக்கிட் அசெக் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோ லெங் காலமானார்.

613
0
SHARE
Ad

Wong Ho Leng Bk Asek 440 x 215சிபு, ஜூன் 22 – நீண்டகாலமாக நோயுடன் போராடிக் கொண்டிருந்த சரவாக் மாநிலத்தின் புக்கிட் அசெக் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோ லெங் (படம்) நேற்றிரவு 11 மணியளவில் சிபு நகரில் காலமானார்.

ஜசெகவைச் சேர்ந்த வோங் ஹோ லெங் காலமானதை சரவாக் ஜசெக மாநிலத் தலைவர் சோங் சியன் ஜென் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

வோங் முன்னாள் சரவாக் மாநில ஜசெக தலைவருமாவார். அவர் நீண்ட காலமாக மூளைப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.

#TamilSchoolmychoice

-பெர்னாமா