சிபு, மே 2 – மூளை புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் ஜசெக புக்கிட் அசேக் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோ லெங் நினைவிழந்த நிலையில் தற்போது சிபுவில் உள்ள ரெஜாங்மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
வோங்கின் நிலை குறித்து அனைவருக்கும் பகிரங்கப்படுத்த அவரது துணைவியார் ஐரின் சாங் நேற்று செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார்.
மக்களின் பிரதிநிதியான அவருடைய உடல் நிலைபற்றிஅவரது தொகுதிமக்களுக்கு தெரிவிப்பதுதான் சரியான நடவடிக்கையாகும்என்றுஅவர்கூறினார்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன் கணவரால் தனது கடமைகளைமேற்கொள்ள முடியாமல் இருப்பதற்காக சிபு மக்களிடம் சாங் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
எனினும் வோங்கிற்கு உதவ முன் வந்த அனைவருக்கும் குறிப்பாக முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திமிற்கு அவர் நன்றி கூறிக் கொண்டார்.
மாநில அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கஉதவிய சரவாக் ஜசெக தலைவர் சோங் சியெங் ஜென்னுக்கும் ஐரின் சாங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தனது கணவரின் மருத்துவ செலவினங்களுக்கு உதவிக் கரம் நீட்ட முன்வந்த சரவாக் மாநில அரசாங்கத்திற்கும், குறிப்பாக மாநில முதல்வர் அட்னான் சாத்திமுக்கும் ஐரின் சாங் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தனது கணவர் இருக்கும் நிலைமையில் அவர் நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்கமாட்டார் என்ற சோகச் செய்தியையும் ஐரின் சாங் பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் மருத்துவ பரிசோதனையின் போது வோங்கின் மூளையில் கட்டி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிபு நாடாளுமன்றத் தொகுதியை உள்ளடக்கிய புக்கிட் அசேக் சட்டமன்றத் தொகுதியில் 2006இல் வோங் வென்றார். அப்போது முதல் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.
மே 2010இல் நடந்த இடைத் தேர்தலில் வோங் சிபு நாடாளுமன்றத் தொகுதியில் வென்றார்.
இருப்பினும் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் வோங் சிபு நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடவில்லை.
சரவாக் மாநிலத்தின் சட்டங்களின் படி ஜூன் 20ஆம் தேதிக்கும் பின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் இடைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.