Home உலகம் இந்தியாவில் தன் சேவையை விரிவாக்க தென் ஆப்ரிக்க ஏர்வேஸ் முடிவு!

இந்தியாவில் தன் சேவையை விரிவாக்க தென் ஆப்ரிக்க ஏர்வேஸ் முடிவு!

489
0
SHARE
Ad

south africa,மும்பை, ஜூன் 23 – இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையிலான பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருவதன் காரணமாக, இந்தியாவில் தன்னுடைய சேவைகளை அதிகரிக்க தென் ஆப்ரிக்க ஏர்வேஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகின்றது.

இந்த ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜோகன்ஸ்பார்க்கிலிருந்து மும்பைக்கு தினசரி விமான சேவையை நடத்தி வருகிறது. பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தால், புது டெல்லியிருந்தும் நேரடி விமான சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது .

இது குறித்து தென் ஆப்ரிக்க ஏர்வேஸின் இந்திய மேலாளராக இருக்கும் சஜித் கான்  கூறுகையில்,”தென் ஆப்ரிக்க ஏர்வேஸைப் பொறுத்த வரையில், எங்களுடைய வளர்ச்சித் திட்டத்தில் இந்தியா பெரும் பங்கு வகிக்கின்றது. கடந்த ஆண்டில் மட்டும் 130,000 பேர் இந்தியாவிலிருந்து தென் ஆப்ரிக்காவிற்கு பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை போதாது என்றாலும், இது மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கின்றோம்.”

#TamilSchoolmychoice

“மும்பை-ஜோகன்னஸ்பர்க் இடையே நேரடி விமான சேவையை நாங்கள் மட்டுமே இயக்கி வருவதால், ஆரோக்கியமான பயணிகள் எண்ணிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியாவுடன் நாங்கள் செய்துள்ள ஒப்பந்தமும், இந்நாட்டில் நாங்கள் விரிவாக்கம் செய்ய உதவியாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெட் ஏர்வேஸ் குறைவான பயணிகளின் எண்ணிக்கையை காட்டி, இந்த வழிப்பாதையிலிருந்து வெளியேறி விட்டது. இடைப்பட்ட காலத்தில், தென் ஆப்ரிக்க ஏர்வேஸ் நிறுவனமும் ஒரு வாரத்திற்கு 7-ஆக இருந்த மும்பை விமான சேவையை ஜுலை 1-ல் இருந்து 6-ஆக குறைத்தது குறிப்பிடத்தக்கது.