Home இந்தியா மோடியின் தாயாரை கடத்தப்போவதாக மிரட்டல்: உளவு பிரிவு தீவிர கண்காணிப்பு!

மோடியின் தாயாரை கடத்தப்போவதாக மிரட்டல்: உளவு பிரிவு தீவிர கண்காணிப்பு!

640
0
SHARE
Ad

modis-motherபுதுடில்லி, ஜூன் 23 – பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேஸ்புக் இணையப் பக்கத்தில் வாலிபர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து உளவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் இன்சமாம் கத்ரி என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியான தகவலில் “மோடியின் தாயாரை நாங்கள் கடத்தினால் அவர் நாங்கள் கூறும் எதனையும் செய்வார்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

modi-motherஇந்தத் தகவல் வெளியானவுடன், இதுகுறித்து குஜராத் மாநில போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து காந்தி நகரில் தங்கியிருக்கும் மோடியின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

பேஸ்புக் கருத்து குறித்து பதிலளிக்க மாநில காவலர்கள் மறுத்துள்ளனர்.  இந்த பேஸ்புக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.

Hindu nationalist Modi, the prime ministerial candidate for India's BJP, talks with his mother Heeraben at her residence in Gandhinagarஇதனைத் தொடர்ந்து பேஸ்புக்கில் இருந்து அந்த கருத்து நீக்கப்பட்டது.  உத்தர பிரதேச போலீசாரும் இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர்.  மாநில உளவு பிரிவு மற்றும் உள்துறை அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.