Home உலகம் சீனாவில் பெரு வெள்ளம் – 26 பேர் பலி!

சீனாவில் பெரு வெள்ளம் – 26 பேர் பலி!

509
0
SHARE
Ad

chinaபெய்ஜிங், ஜுன் 24 – சீனாவின் தெற்கு மாகாணங்களான ஹுனான், ஜியாங்சி, ஃபுஜியான் ஆகிய பகுதிகளில், கடந்த சில தினங்களாக புயலுடன் கூடிய தொடர்மழை பெய்து வருகின்றது.

chani,மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன. பல கோடி யுவான்கள் மதிப்பிலான உடைமைகள் இந்த வெள்ளத்தில் சேதமடைந்தன என்று அரசு அறிவித்துள்ளது.

மழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 26 பேர் பலியானதாகவும், 3 பேரை வெள்ளம் அடித்துச் சென்று விட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice