Home கலை உலகம் ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் லிங்கா!

ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் லிங்கா!

524
0
SHARE
Ad

IMG-20140429-WA016சென்னை, ஜூன் 26 – கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகிறது.

கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி படம் நடிப்பாரா மாட்டாரா என ஒருபுறம் சர்ச்சை எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்க, மைசூரில் தடபுடலாக பூஜை போட்டு ‘லிங்கா’ படத்தை தொடங்கி பாதி படத்தை முடித்தும் விட்டனர். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமும், நிகழ்காலமும் படத்தில் இடம்பெறுகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையில் ரஜினிக்கு ஜோ‌டி சோனாக்சி சின்கா. நிகழ்கால ரஜினிக்கு அனுஷ்கா ஜோடியாகின்றனர்.

ரஹ்மான் இசையமைக்க ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் ‘லிங்கா’ வின் பெரும்பகுதி ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அரங்கு அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. ரஜினியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப ரவிக்குமார் காட்சிகள் அமைத்துள்ளார். சமீபத்தில் ஒரு ரயில் சண்டையை அரங்கில் படமாக்கினர்.

#TamilSchoolmychoice

‘லிங்கா’ எப்போது திரைக்கு வரும் என்ற கேள்வி, படம் ஆரம்பித்த போதே ரசிகர்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அதற்கு தற்போது அப்படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளனர்.

ரஜினி ரசிகர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு காரணம் ஒரே வருடத்தில் ரஜினியின் இரு தமிழ்ப் படங்கள் வெளியாவது பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தான்.

இதற்கு முன்பு, பாட்ஷாவும், முத்துவும் 1995 -ல் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.