Home கலை உலகம் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகனும் சினிமாவில் நடிக்கிறார்

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகனும் சினிமாவில் நடிக்கிறார்

700
0
SHARE
Ad

mahesh-n-sonசென்னை, பிப்.19- பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர்.

இவர் தெலுங்கில் நிறைய வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

மகேஷ் பாபுவுக்கும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்த நம்ரதாவுக்கும் 2005-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கவுதம் கிருஷ்ணா, காட்டாமனேனி என இரு குழந்தைகள் உள்ளனர்.

#TamilSchoolmychoice

இதில் கௌதம் கிருஷ்ணாவை குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார் மகேஷ்பாபு. கவுதம் கிருஷ்ணாவுக்கு 7 வயது ஆகிறது.

சுகுமார் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ள புதுப் படத்தில் கவுதம் நடிக்கிறார். இதற்காக கௌதமிற்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மகேஷ் பாபுவும் தனது தந்தை நடிகர் கிருஷ்ணாவுடன் ‘நேடா’ படத்தில் 1979-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகித்தான் கதாநாயகனாக உயர்ந்தார்.

அதுபோல் தனது மகனையும் சினிமாவுக்கு கொண்டு வருகிறார்.

இதுகுறித்து நம்ரதாவிடம் கேட்டபோது இயக்குனரும் தயாரிப்பாளரும்    கௌதமிடம் நடிக்கும்படி பேசி சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.