Home வணிகம்/தொழில் நுட்பம் ஆர்ஆர்ஐ சுங்கைபூலோ மேம்பாடு-முதல் கட்டம் எம்ஆர்சிபி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது

ஆர்ஆர்ஐ சுங்கைபூலோ மேம்பாடு-முதல் கட்டம் எம்ஆர்சிபி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது

711
0
SHARE
Ad

MRCB logoகோலாலம்பூர், ஜூலை 1 – மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் சுங்கை பூலோவிலுள்ள ஆர்ஆர்ஐ தோட்டம் அரசாங்கத்தால் மேம்படுத்தப்படும் என பிரதமர் நஜிப்பால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 2,330 ஏக்கர் நிலப்பரப்புள்ள இந்த நிலத்திட்டத்தின் முதற்பகுதி 64 ஏக்கரில் மேம்படுத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது புரஜெக்ட் எம்எக்ஸ் 1 என அழைக்கப்படும். இந்த முழுத் திட்டமும் குவாசா டாமன்சாரா நகரம் (Kwasa Damansara Township) என்று அழைக்கப்படும். இங்கு முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் 64 ஏக்கர் புரஜெக்ட் எம்எக்ஸ் 1 திட்டத்திற்கான குத்தகையை தாங்கள் பெற்றுள்ளதாக எம்ஆர்சிபி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த 64 ஏக்கர் மொத்த நிலத்தின் மதிப்பு 7 பில்லியன் மலேசிய ரிங்கிட் ஆகும். மற்ற 5 மேம்பாட்டு நிறுவனங்களோடு போட்டி போட்டு தாங்கள் இந்த குத்தகையை பெற்றுள்ளதாக எம்ஆர்சிபி நிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக ஊழியர் சேம நிதி வாரியம் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குத்தகையில் வெற்றி பெற்ற தாங்கள் இந்த நிலத் திட்டம் குறித்த ஆவணங்களையும் ஒப்பந்தங்களையும் தயாரிப்பதில் தற்போது ஈடுபட்டு வருவதாக எம்ஆர்சிபி நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் எம்ஆர்டி துரித ரயில் சேவைத் திட்டத்தின் தலையாய நிலையமாக இந்த குவாசா டாமன்சாரா விளங்கும் என்பதால் இந்தத் திட்டம் வெற்றிகரமான திட்டமாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.