Home கலை உலகம் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார் காஜல் அகர்வால்!

கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார் காஜல் அகர்வால்!

808
0
SHARE
Ad

kajalசென்னை, ஜூலை 1 – எதிர்ப்பால் பின்வாங்கிய காஜல் மீண்டும் சம்பளம் உயர்த்துகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்தியில் நடிக்கத் தொடங்கியபிறகு டோலிவுட் படங்களில் நடிக்க அதிக சம்பளம் கேட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை சில தயாரிப்பாளர்கள், கதாநாயகிகளே தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்வதை தவிர்த்தனர். இதனால் பட வாய்ப்புகள் பறிபோனது. அதிர்ச்சி அடைந்த காஜல் தான் சம்பளம் எதுவும் உயர்த்தவில்லை என்று கடந்த ஆண்டு அறிக்கை ஒன்றை விட்டார்.

Kajal-Agarwalபிறகு அந்த பேச்சு அடங்கியது. தற்போது மீண்டும் அதிக சம்பளம் கேட்க தொடங்கி இருக்கிறார் காஜல். டோலிவுட் தயாரிப்பாளரின் 3 படங்களில் ஒப்பந்தமான காஜல் அதற்காக ரூ.4 கோடி வாங்கினாராம்.

#TamilSchoolmychoice

தற்போது அதே தயாரிப்பாளர் தனது புதிய படத்தில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் கேட்டபோது கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம் காஜல் அகர்வால்.