Home இந்தியா ஆந்திர தொழிலாளர்களின் உடல்களை விமானம் மூலம் கொண்டு செல்ல வேண்டும் -சிரஞ்சீவி

ஆந்திர தொழிலாளர்களின் உடல்களை விமானம் மூலம் கொண்டு செல்ல வேண்டும் -சிரஞ்சீவி

575
0
SHARE
Ad

siranjiviசென்னை, ஜூலை 1 – சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில்  உயிரிழந்த ஆந்திர மாநிலத் தொழிலாளர்களின் உடல்களை விமானம் மூலம் எடுத்துச் சென்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மௌலிவாக்கத்தில் கட்டிட விபத்து நடந்த இடத்துக்கு நடிகர் சிரஞ்சீவி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு வந்தார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிட்ட அவர் மீட்கப்பட்டவர்களின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர்,செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது, “மனிதத் தவறுகளால் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த 11 மாடிக் கட்டடம் கட்டப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கு காரணமானவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கட்டிட விபத்தில் சிக்கியவர்களுக்கு மாநில அரசு தற்போது வழங்கிய நிதியுதவி போதுமானது அல்ல.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மீட்கப்பட்ட ஆந்திரத் தொழிலாளர்களின் உடல்களை விமானத்தின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு,

அவர்களது உறவினர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் இறுதிச் சடங்குகளை அவர்கள் துரிதமாக மேற்கொள்ள முடியும் என்றார் சிரஞ்சீவி.