Home India Elections 2014 சிரஞ்சீவி மீது செருப்பு, முட்டை வீச்சு!

சிரஞ்சீவி மீது செருப்பு, முட்டை வீச்சு!

571
0
SHARE
Ad

chiranjeeviஅனந்தபுரம், மே 2 – மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி மீது செருப்பு மற்றும் முட்டை வீசப்பட்டது. இதையடுத்து சிரஞ்சீவி பொதுக்கூட்டத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார்.

மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி, சீமாந்திரா பகுதி காங்கிரஸ் பிரச்சார குழுத் தலைவராக உள்ளார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று சிரஞ்சீவி அனந்தபுரம் மாவட்டம் கோரண்ட்லா பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மீது கூட்டத்தில் பங்கேற்ற சிலர் முட்டை, செருப்புகளை வீசினார்கள்.

#TamilSchoolmychoice

இவைகளை பூவுக்குள் சுற்றி விசினார்கள். பூக்கள்தான் வீசப்படுகிறது என காவல்துறையினர் முதலில் கூறினார்கள். ஆனால், பூவுக்குள் மறைத்து வீசப்பட்ட ஒரு முட்டை சிரஞ்சீவி மீது பட்டு உடைந்த பிறகுதான் முட்டை என தெரியவந்தது.

இதே போல் செருப்பும் பூவுக்குள் மறைத்து வீசப்பட்டது. சுதாரித்துக் கொண்ட போலீசார் சிரஞ்சீவியை சுற்றி நின்று பாதுகாப்பளித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.