Home வணிகம்/தொழில் நுட்பம் ஏப்ரல் மாதத்தில் ஜப்பான் கார்கள் உற்பத்தில் வீழ்ச்சி!

ஏப்ரல் மாதத்தில் ஜப்பான் கார்கள் உற்பத்தில் வீழ்ச்சி!

435
0
SHARE
Ad

dataடோக்கியோ, மே 2 – உலக அளவில் கார்கள் உற்பத்தியில் ஜப்பான் முன்னணி வகித்து வருகின்றது. பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியதன் மூலம் பொருளாதார லாபம் அடைந்து வந்த ஜப்பான், கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.5% வீழ்ச்சியைக் கண்டுள்ளது.  

ஜப்பானின் கார்கள் உற்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி பற்றி அந்நாட்டு ஆட்டோ மொபைல் விநியோகஸ்தர்கள் சங்க இயக்குனர் யோஷிடக ஹாஷி கூறுகையில், “தற்போது ஏற்பட்டுள்ள விழ்ச்சியிலிருந்து, விரைவில் மீள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்களிடமிருந்து கடந்த மாதத்திற்கான உற்பத்தி தேவைகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. எனினும் இந்த வீழ்ச்சியின் காரணமாக அது குறைவதற்கான வாய்ப்பு உள்ளது”

“மேலும், இந்த வீழ்ச்சியின் காரணமாக மே மற்றும்எதிர் வரும் ஜூன் மாதங்கள் மிகக் கடினமானதாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜப்பான் நிறுவனங்கள்  345,226 வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.