Home தொழில் நுட்பம் கூகுளின் நெக்சஸ் 6-ல் கைரேகையை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம்!

கூகுளின் நெக்சஸ் 6-ல் கைரேகையை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம்!

422
0
SHARE
Ad

fingerprint_scanner_featured-300x300மே 2 – கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் 6 திறன்பேசிகளில் கைரேகையை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் புகுத்தப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது திறன்பேசிகளின் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு பல புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு வருகின்றது.

மேலும் கூகுளின் போட்டியாளர்களான ஆப்பிள், ஹெச்டிஸி மற்றும் சாம்சங் திறன்பேசிகளில் இந்த தொழில்நுட்பங்கள் ஏற்கனவே உள்ளது.

நெக்சஸ் திறன்பேசிகளில் கூகுளின் இந்த புதிய முயற்சி பற்றி தொழிநுட்பத் தகவல்களுக்கான ஆண்டிராய்டு க்ரீக்ஸ் எனும் வலைத்தளம் வெளியிட்டுள்ள தகவலில்,”கூகுள் நிறுவனம் தனது அடுத்தத் தயாரிப்பான நெக்சஸ் 6 திறன்பேசிகளில் கைரேகையை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கு ஆசியாவில், சில தொழில்நுட்ப உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. நெக்சஸ் 6, LG G3 திறன்பேசியை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றது” என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், நெக்சஸ் 6 திறன்பேசிகள், 5.2 அங்குல தொடுதிரை, QHD (2560×1440) பிக்சல் தீர்மானம், 2.5GHz quad-core Snapdragon 805 செயலி(processor) ஆகியவற்றை சிறப்பு அம்சங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

நெக்சஸ் 6 திறன்பேசிகளின் வெளியீடு, இந்த ஆண்டின் மத்தியில் இருக்கலாம் என கூகுளின் ஆண்டிராய்டு பிரிவுத் தலைவர் சுந்தர் பிச்சை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.