இதன் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அங்குள்ள ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்டுடியோவில் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது ரஜினியிடம், சிரஞ்சீவி உங்களை பார்க்க விரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டது. உடனே வருமாறு ரஜினி சொல்லிவிட்டார். இதையடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சிரஞ்சீவி, ரஜினியை பார்த்ததும் நெகிழ்ந்தார்.
இது குறித்து பட குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “ஸ்டுடியோவில் ரஜினி படப்பிடிப்பு நடந்தபோது, பக்கத்திலேயே சிரஞ்சீவி நடிக்கும் 150வது படத்துக்கான இடம் தேர்வு நடந்தது.
ரஜினியும் இதே தளத்தில் இருப்பதை அறிந்து கொண்டு சிரஞ்சீவி ஓடோடி வந்தார். இருவரும் அரைமணி நேரமாக என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. சந்திப்புக்கு பிறகு வெளியே வந்தவர்கள், உற்சாகத்துடன் காணப்பட்டனர்” என்றார்.