Home உலகம் போருக்கு பிந்தைய இலங்கையை உலக நாடுகள் ஆராய வேண்டும் – ராஜபக்சே! 

போருக்கு பிந்தைய இலங்கையை உலக நாடுகள் ஆராய வேண்டும் – ராஜபக்சே! 

507
0
SHARE
Ad

AVN27_RAJAPAKSA_19951fகொழும்பு, ஜூலை 22 – இலங்கையில் போருக்கு பின் ஏற்பட்டுள்ள மேம்பாட்டு நடவடிக்கைகளை உலகத்தலைவர்கள் வந்து பார்வையிட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார்.

போர்ச்சுகல் பிரதமர் பெட்ரோ பாசோஸ் கோயல்ஹோ, இலங்கையில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியுள்ளார்.

போர்ச்சுகல் பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு அதிபர் ராஜபக்சே கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டுப் போரில், நாட்டின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.  இந்தப் போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீங்க, நீண்ட நாட்களாகும்.”

#TamilSchoolmychoice

“கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள் போருக்குப் பின் இங்கு நிலவும் உண்மை நிலவரத்தைக் கண்டு வியப்படைந்தனர்.”

President-Mahinda-Rajapaksa“போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்குப் பகுதியில் அரசு மேற்கொண்ட துரித வளர்ச்சிப் பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக அப்பகுதிகளில் 20 சதவீதம் மேல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது” என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பாஸ்பரஸ் மற்றும் இரசாயன குண்டுகள் வீசி கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தப்போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கை மீது ஐ.நா. பொதுச் சபையில் புகார் அளித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. சபை ஆயத்தமாகி வரும் நிலையில் ராஜபக்சே இத்தகைய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்று விமர்சிக்கப்படுகின்றது.