Home கலை உலகம் பிரபலமான தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முன்னிலை!

பிரபலமான தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முன்னிலை!

1512
0
SHARE
Ad

புது டெல்லி: 2018 ஆண்டிற்கான தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளின் பட்டியல் வெளிவந்துள்ளது. நயன்தாரா தொடங்கி, சமந்தா ரூத் பிரபு, காஜல் அகர்வால், அனுஷ்கா ஷெட்டி வரை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தென்னிந்தியத் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துள்ள நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். இவரது இயர்பெயர் டையானா மரியம் குரியன் ஆகும். தனி ஒருவன் படத்தின் மூலம் தனக்கான தனி ஓர் இடத்தினை பெற்றவர். அறம், கோலமாவு கோகிலா, டோரா, நானும் ரௌடிதான் போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பின் உச்சத்தை இரசிகர்களுக்கு அளித்த திரைப்படங்கள் ஆகும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, சமீபத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட 2018-ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெறும் இந்திய நட்சத்திரங்களுக்கான பட்டியலில் தென்னிந்திய கதாநாயகிகளில் நயன்தாரா மட்டுமே இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 15.17 கோடி ரூபாய் வருவாயுடன்தென்னிந்திய திரைப்படத் துறையில் தற்போது நல்ல கதையம்சங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, 69-வது இடத்தில் இடம்பெற்றிருந்தார்.

பாகுபலி புகழ் அனுஷ்கா ஷெட்டி மற்றும் தமன்னா ஆகியோர், பாகுபலி படம் வெளியானதற்குப் பிறகு நடிப்புலகில் சிறந்த ஓர் இடத்தினைப் பெற்றனர். எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் சிறப்பான நடிப்பினை வழங்கிய இவர்கள் இருவருக்கும் இரசிகர்களின் மத்தியில் பாராட்டுகள் குவிந்தன. 

இவர்களைத் தவிர்த்து மேலும் சில நடிகைகள் அவ்வப்போது தங்களின் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் நல்லதொரு பெயரினைப் பெற்று வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ், திரிஷா கிருஷ்ணன், காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோட்வானி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கீழ்காணும் பட்டியலில் தமிழ்த் திரைப்படங்களில் அதிகமாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்:

  • நயன்தாரா
  • சமந்தா ரூத் பிரபு
  • கீர்த்தி சுரேஷ்
  • திரிஷா கிருஷ்ணன்
  • காஜல் அகர்வால்
  • ஸ்ரூதி ஹாசன்
  • ஹன்சிகா மோட்வானி
  • ஐஸ்வர்யா ராஜேஷ்
  • அனுஷ்கா ஷெட்டி
  • தமன்னா