Home நாடு கேமரன் மலை: ஜனவரி 26-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்!

கேமரன் மலை: ஜனவரி 26-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்!

1118
0
SHARE
Ad

புத்ராஜெயா: கேமரன் மலை இடைத்தேர்தல் ஜனவரி 26-ம் தேதி நடத்தப்படும் என மலேசியத் தேர்தல் ஆணையம் இன்று புதன்கிழமை அறிவித்தது. இதற்கிடையே, ஜனவரி 12-ம் தேதி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் எனத் தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார்.

இதற்கிடையே, முன்னதாக வாக்களிக்க ஜனவரி 22-ஆம் தேதியை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. தேர்தல் பரப்புரைகள் 14 நாட்களுக்கு, அதாவது வேட்புமனு தாக்கல் செய்த தேதியிலிருந்து, ஜனவரி 25-ஆம் தேதி இரவு 11:59 வரை வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபடலாம் என அவர் தெரிவித்தார்.   

#TamilSchoolmychoice

2018-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை சுமார் 32,009 வாக்காளர்களை கேமரன் மலைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த இடைத்தேர்தலில், சுமார் 70 சதவீத வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.