Home கலை உலகம் போர்ப்ஸ் இந்தியா பட்டியலில் அசத்தும் தென்னிந்திய நடிகை நயன்தாரா

போர்ப்ஸ் இந்தியா பட்டியலில் அசத்தும் தென்னிந்திய நடிகை நயன்தாரா

1211
0
SHARE
Ad

சென்னை: 2018-ம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இந்தியா 100 – அதாவது அதிக வருமானம் பெரும் 100 இந்திய நட்சத்திரங்களின் பெயர் பட்டியல் வெளியாகி அதில் மூன்றாவது முறையாக சல்மான் கான் 253.25 கோடி ரூபாய் வருவாயுடன் முதலிடம் வகிக்கிறார். தென்னிந்திய கதாநாயகிகளில் நயன்தாரா மட்டுமே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

15.17 கோடி ரூபாய் வருவாயுடன், தென்னிந்திய திரைப்படத் துறையில் தற்போது நல்ல கதையம்சங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, 69-வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய திரைப்பட நடிகை தீபிகா படுகோன் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து, முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்ற முதல் பெண்மணி எனும் அங்கீகாரத்தைப் பெறுகிறார்.

#TamilSchoolmychoice

தென்னிந்திய திரைப்படத் தொழில்துறையின் பிரதிநிதித்துவம், 2017-ம் ஆண்டைக் காட்டிலும் 17-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. .ஆர்.ரஹ்மான் 66.75 கோடி ரூபாய் வருவாயிலும், நடிகர் ரஜினிகாந்த் 50 கோடி ரூபாய் வருவாயிலும், 11-வது மற்றும் 15-வதுஇடத்தில் இடம்பெறுகின்றனர்.

2018 போர்ப்ஸ் இந்திய நட்சத்திரங்கள் 100 பட்டியல் தரவரிசை 2017-ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 30 வரை பிரபலங்களின் பொழுதுபோக்கு தொடர்பான வருவாய் மதிப்பீடுகளின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில், விஜய் சேதுபதி, சூர்யா, நாகார்ஜூனா மற்றும் மம்மூட்டி ஆகியோர் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.