Home நாடு சீ பீல்ட்: மேலும் 38 பேர்களைக் காவல் துறையினர் தேடுகின்றனர்

சீ பீல்ட்: மேலும் 38 பேர்களைக் காவல் துறையினர் தேடுகின்றனர்

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரம் குறித்த விசாரணைக்கு உதவ மேலும் 38 பேர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோஶ்ரீ அகமட் நஜ்முடின் முகமட், அவர்களை முன்வந்து இவ்விசாரனைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இது குறித்து தகவல் தெரிந்த பொதுமக்களும் பின்வரும் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • டிஎஸ்பி ஷான் கோபால், 019-2714387
  • ஏஸ்பி நீராஜ் துரை, 016-3565622
  • அல்லது நோர்ஷியா ஹுசீன், 012-7989973

இவ்விவகாரம் குறித்து பொதுமக்கள் எல்லா காவல் நிலையத்திலும் தகவல் தரலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார். இதுவரையிலும், இக்கலவரம் தொடர்பாக கைதானோர் எண்ணிக்கை 99-ஐ எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.